தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி – சௌமியா அன்புமணி!

தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான்” என்று சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி,”தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான்” என்று கூறினார். தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான். அங்கிருந்த அனைத்து விவசாயிகளையும் ஒரே இரவில் தூக்கிப்போட்டுவிட்டு தண்ணீரையும் உறிஞ்சிவிட்டு அதன் வளத்தையும் கெடுத்துவிட்டார்கள்.
நிலம் கொடுத்த விவசாயிகள் பிள்ளைகளுக்குக்கூட பணி வழங்கவில்லை. நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளை பணியில் சேர்த்துக்கொள்ள எதற்கு என்எல்சி தேர்வு வைக்க வேண்டும். மண்ணின் மைந்தர்கள் அவர்கள். என்எல்சி கொடுக்கிற தகவல்கள் எல்லாமே உண்மைக்கு புறம்பான தகவல். விவசாயிகளுக்காக அவர்கள் எதுவும் செய்ததில்லை என்றார்.

அமைச்சர் கீர்த்தனா:

என்எல்சி நிறுவனம் குறித்து உண்மையாகவே பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர்.
சிஎஸ்ஆர் நிதியில் இருந்து ஒதுக்காமல் இதுவரை நிறைய பிரச்சனைகளை செய்திருக்கலாம். அதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், விவசாயிகளுக்கு எப்போதும் தவெக அரசு துணை நிற்கும். என்எல்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சி வந்து 3 மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. கமிட்டி அமைத்திருக்கிறோம். முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இதுதொடர்பாக தகவல்கள் விரைவில் வழங்கப்படும். கண்டிப்பாக நாங்கள் யாருக்கு எதிராகவும் நடந்துக்கொள்ள மாட்டோம். விவசாயிகளுக்கு கண்டிப்பாக ஆதரவாக இருப்போம். மக்களுக்கும் ஆதரவாக இருப்போம். என்எல்சி நிறுவனம் அப்படி இருப்பது உண்மையானால் தவெக அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.