தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. தீபாவளிக்கு முன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் கீர்த்தனா:
சிவகாசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நான்கு விபத்துகள் ஏற்பட்டு இருக்கிறது. 177 பட்டாசு ஆலைகள் நிதிநிலை கண்டறிந்து ஆய்வுக்கு உட்படுத்தபட்டது. 13ஆம் தேதிக்கு முன்பே சரி செய்யப்பட்டது.
தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.
பிரச்சனைகள் முடிந்த பிறகு போராட்டங்கள் நடத்தப்படுவதால் தான் அரசியல் புகுத்தப்படுகிறது என்று சொல்கிறோம்.
தங்கம் தென்னரசு:
பட்டாசு தொழில் கடுமையாக பாதித்துள்ளது. நாங்கள் மட்டுமல்ல பொது அமைப்புகள் உண்ணாவிரத போராட்டங்கள் செய்துள்ளார்கள். விதிமுறை மீறிய தொழிற்சாலைகளில் ஆய்வு செய்வதை யாரும் தடுக்கவில்லை ஆனால் சிறு தொழிற்சாலைகள் உள்ளிட்ட மற்றவற்றிலும் ஆய்வு செய்வதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. வாழ்வாதார பிரச்சினை என்பதால் தான் அதை பேசுகிறோம் என்றார்.




