தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்படுகிறது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10-ம் தேதி கிராம் ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்தது. இதனை தொடர்ந்து, நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14 ஆயிரத்து 205 எனவும், சவரனுக்கு ரூ.680 சரிந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 6 640-க்கும் விற்பனை ஆனது. காலையில் குறைந்த தங்கம் விலை மாலை திடீரென உயர்ந்தது. ற்பனை ஆனது. காலையில் குறைந்த தங்கம் விலை மாலை திடீரென உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 400-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கும், சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கு விற்பனையாகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..




