தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் தொடங்கியது. பேரவை தொடங்கியதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசியவர் அமைச்சர் – வன்னியரசு:
அம்பேத்கர் அயலக, உயர்கல்வி திட்டத்தில், வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதில்லை என எழுந்த கேள்வி முற்றிலும் தவறானது, உள்நோக்கத்துடன் சமூக நீதிக்காக எதிராக எழுப்பப்படும் கேள்வியாக கருதப்படுகிறது. வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் கல்வி கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது, இரண்டாவது வருடம் படிப்பதற்காக 12 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் மாணவர் பரப்பி வருகிறார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி தொகை வழங்குவதில் எந்த ஒரு தாமதம் தடவலோ இல்லை. மாணவரின் சரியான செயல்பாடுகளை பார்க்காமல்,அரசியல் நோக்கத்தோடு அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியை விட இந்த வருடம் 362 மாணவர்களுக்கு 131 கோடி வழங்கப்பட்டுள்ளது.
திமுக செழியன்:
மாணவர்கள் வீடியோ வெளியிட்ட பிறகு அந்த நிலுவை தொகை அரசு செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அமைச்சர் அறிவிக்க வேண்டும்.
அமைச்சர் – வன்னியரசு :
கடந்த வருடத்தை விட இந்த வருடம் 3% மாணவர்களுக்கு நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 84 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது, மாணவர்களின் கல்விகள் தடைப்படக்கூடாது என முதலமைச்சர் தெரிவித்து, கூடுதலாக 131 கோடி ரூபாய் முதலமைச்சர் அறிவித்தார். மாணவர்கள் வெளிநாடுகள் செல்வதில் பாஸ்போர்ட் விசா பிரச்சினை உள்ளது அது குறித்து மத்திய அரசிடம் நாங்கள் பேசி வருகிறோம். 362 மாணவர்கள் அயலகம் சென்று கல்வி பயில்வார்கள் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
அமைச்சர் – ஸ்ரீநாத்:
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் முழுவதுமே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த அவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகள் முழுவதுமே விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பாக ஆந்திர மாநில அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. மீன்வள ஆணையர் மற்றும் நெல்லூர் மாவட்ட ஆட்சியருக்கு, ஒழுங்குமுறை சட்டத்தின் படி படகுகளை விடுவிக்க வேண்டும் என நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுள்ளோம். ஆந்திரா கடலோரப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக இரு மாநிலங்களும் தொடர்ந்து பேசி வருகிறது.
அவையின் முன்னவர் செங்கோட்டையன்:
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாக அமைச்சர்கள் முறையான பதில்களை வைத்துள்ளார்கள் என்பது குறித்து சபாநாயகர் பார்க்க வேண்டும் .
சபாநாயகர்:
கவனயீர்ப்பு சிறப்பு தீர்மானத்தில் அமைச்சர்களிடமிருந்து பதில் வந்துள்ளதா என்பது குறித்து பிறகு தான் கவனயீர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய தொகுதியின் தேவைகள் குறித்து முன்வைத்து வருகின்றனர்




