முக்கியச் செய்திகள் தமிழகம்

நீலகிரி: அந்நிய மரங்களை அப்புறப்படுத்தாமலிருத்தல் நீதிமன்ற அவமதிப்பாகும் – உயர்நீதிமன்ற எச்சரிக்கை

நீலகிரியில் அடையாளம் காணப்பட்ட  அந்நிய மரங்களை முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்ற வனத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வனப் பகுதிகளில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவது
தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி அடங்கிய
அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது நீலகிரி மாவட்டத்தில் 191 இடங்களில் அந்நிய மரங்கள் பரவி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் 53 இடங்களில் அந்த அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 16 இடங்களில்இருந்த அந்நிய மரங்களை அகற்றி விற்பனை செய்ததன் மூலமாக நான்கு கோடியே 2 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து மொத்தமுள்ள அனைத்து பகுதிகளிலும் இருக்கக்கூடிய அந்நிய மரங்களை
அடையாளம் காணும் நடவடிக்கைகளை 15 நாட்களில் முடித்து நான்கு வாரங்களில்
டெண்டர் கோரி அவற்றை அகற்ற வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த உத்தரவை
அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் எனவும்
வனத்துறைக்கு எச்சரிக்கை விடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு
தள்ளி வைத்தனர்.

இதேபோல மசினகுடி மற்றும் முதுமலை ஆகிய பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை
அகற்றுவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டெண்டரை இறுதி செய்து மரங்களை அகற்றும் பணியை தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு காகித நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அது சம்பந்தமாக டிசம்பர் 22ஆம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்
என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நிஞ்சா உடையணிந்து பெண் போலீஸ் மீது வாள் தாக்குதல்: இளைஞர் சுட்டுப் பிடிப்பு!

Halley Karthik

அஸ்ஸாமில் சிவன் வேடத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு: ஒருவர் கைது

Web Editor

திண்டுக்கல் : மாணவியர் விடுதியில் பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

EZHILARASAN D