முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“சச்சின் பைலட் ஒரு துரோகி…அவரால் முதலமைச்சர் ஆக முடியாது”- அசோக் கெலாட் காட்டம்

ராஜஸ்தான் காங்கிரசில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையேயான மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சச்சின் பைலட் ஒரு துரோகி என முதலமைச்சர் அசோக் கெலாட் கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலிலிருந்தே அம்மாநில காங்கிரசில் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் ஆதரவாளர்களிடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. முதலமைச்சர் பதவியை  சச்சின் பைலட்டுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு அசோக் கெலாட் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய முதலமைச்சராக அசோக் கெலாட்டை தேர்ந்தெடுப்பதற்காக கூட்டப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த 90 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளையும் ராஜினாமா செய்ய முன்வந்தனர். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிட்டு ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தொடர்ந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காங்கிரஸ் தலைமையின் தலையீட்டைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சை தலைதூக்கியுள்ளது. சச்சின் பைலட் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அசோக் கெலாட், சொந்த கட்சியின் ஆட்சியையே கவிழ்க்க முயற்சி செய்த துரோகி என கடுமையாக சாடியுள்ளார். கட்சிக்கு துரோகம் செய்த, 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கூட இல்லாத ஒருவரை முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் தலைமை தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறியுள்ள அசோக் கெலாட், சச்சின் பைலட்டால் ஒரு போதும் ராஜஸ்தான் முதலமைச்சர் ஆக முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆதரவாளர்கள் மோதல் தலைதூக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அசோக் கெலாட் தம்மை பற்றி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சச்சின் பைலட், தம் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை அசோக் கெலாட் தெரிவிப்பதாக கண்டித்துள்ளார். தாம் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோதுதான் அம்மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தாக சச்சின் பைலட் சுட்டிக்காட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து!

Web Editor

சோளம் திருடியதாகக் கூறி பட்டியலின இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்!

EZHILARASAN D

E-Sim உடன் வெளியாகும் ஐஃபோன் 14 ப்ரோ?

G SaravanaKumar