முக்கியச் செய்திகள் தமிழகம்

4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வரும் 19ஆம் தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கிறது: பொள்ளாச்சி ஜெயராமன்

Halley karthi

பெட்ரோல், டீசல் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது: மத்திய சுகாதாரத்துறை

Halley karthi