ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் மதிமுக போட்டியிடும் என வைகோ தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணாவின் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, அண்ணாவின் எண்ணங்களை நிறைவேற்றும் ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசு செயல்பட்டு வருகிறது என்று பாராட்டினார். கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதே நீட் உயிரிழப்பு களுக்கு காரணம் என்று குற்றம்சாட்டிய அவர், மாநிலங்கள் இழந்த உரிமையைப் பெறுவோம் என்று குறிப்பிட்டார்.
அனைவரும் பாராட்டும்படியான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது என்ற அவர், புதிதாக வரும் ஆளுநர், முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்த தவறை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன் என்றார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் மதிமுக போட்டியிடும் என்றும் அறிவித்தார்.