நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு பள்ளிகளில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு…

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு பள்ளிகளில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அனுப்பம்பட்டு ஊராட்சி உயர்நிலைப் பள்ளி:

திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு ஊராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளிதலைமை ஆசிரியர் K.ஜெயா, கணித ஆசிரியர் டி.தாஸ், ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சார்லஸ் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பாலின சமத்துவம் குறித்து உரையாற்றினர். இதையடுத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்று கொண்டனர். இதையடுத்து நடைபெற்ற மாதவிடாய் விடுமுறை இயக்கத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து கிராம மக்களிடையே நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.

விருதுநகர் மாவட்டம், கோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி:

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பாலின சமத்துவ உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதையடுத்து நடைபெற்ற மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.

உசிலம்பட்டி, ஜெயசீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டியில் அமைந்துள்ள ஜெயசீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நியூஸ்7 தமிழ் சார்பில் “நிகரென கொள்” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர் ஜெயந்த் மற்றும் முதல்வர் மலைச்சாமி பாலின சமத்துவ உறுதிமொழியை வாசித்தனர். அதனை 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பாலின சமத்துவ உறுதிமொழியின் தொடர்ச்சியாக மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கையொப்பமிட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.