சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட “போகிமான்” கரப்பான்பூச்சி!

சிங்கப்பூரில் உள்ள வனஉயிரி காப்பகத்தில் புதிய வகை கரப்பான் பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீடியோகேம் தொடரின் ஏழாவது ஜெனரேஷனில் தோன்றும் கரப்பான் பூச்சி போன்ற போகிமானின் வடிவில் புதிய வகை கரப்பான் பூச்சி கண்டறியப்பட்டுள்ளது.…

சிங்கப்பூரில் உள்ள வனஉயிரி காப்பகத்தில் புதிய வகை கரப்பான் பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடியோகேம் தொடரின் ஏழாவது ஜெனரேஷனில் தோன்றும் கரப்பான் பூச்சி போன்ற போகிமானின் வடிவில் புதிய வகை கரப்பான் பூச்சி கண்டறியப்பட்டுள்ளது. இந்த கரப்பான்பூச்சிக்கு  பெரோமோசா என  பெயரிட்டுள்ளனர்.

2016 மற்றும் 2017-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சிஙப்பூரின் புக்கிட் திமா வன உயிரி காடுகளில் உள்ள இரண்டாம் நிலை காட்டில் பூச்சிகளின் கணக்கெடுப்பின் போது சில ஆண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அது எந்த வகையான கரப்பான் பூச்சியின் அடையாளம் தெரியாமல் மர்மமாக இருந்தது.

ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட எந்த உயிரினத்திற்கும் அந்த பூச்சியின் டிஎன்ஏ பொருந்தவில்லை என்பதால், இந்த இனம் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இதனிடையே புருனேவில் உள்ள  கரப்பான் பூச்சி ஆண் மாதிரிகளுடன் இவற்றை இடையிலான வேறுபாடுகளை ஒப்பிட்டனர். இதன்  மூலம் இந்த புதிய கரப்பான் பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு குறித்து  பூச்சியியல் வல்லுநர் ஃபூ மாஷெங் தெரிவித்ததாவது.. “புதிதாக கண்டறிந்த  ஃபெரோமோசாவிற்கும் மென்மையான கரப்பான் பூச்சிக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. நீண்ட ஆண்டெனா,  இறக்கைகள் மற்றும் நீண்ட மெல்லிய கால்கள் போன்றவை ஒரே மாதிரியாக உள்ளன “ என்றார்.

இந்த புதிய வகை கரப்பான் பூச்சி பெரும்பாலான  கரப்பான் பூச்சிகளுடன் போன்ற கொடூரமான அமெரிக்க கரப்பான் பூச்சிகளைப் போலல்லாமல் மிகவும் மென்மையானதாக இருக்கும். ஏனெனில் அது நன்கு பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் வாழ முனைகிறது என தெரிவிக்கிறார்கள்.

யாழன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.