நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வழங்கும் ‘எழுமின் விருதுகள்’ – மக்கள் தேர்ந்தெடுத்தவர்களுக்கு அங்கீகாரம்

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் மாவட்டந்தோறும் வழங்கப்பட்டு வரும் ‘எழுமின் விருதுகள்’ நிகழ்ச்சி முதலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றது. கல்வி, மருத்துவம், வணிகம், சேவை, விவசாயம், விளையாட்டு, ஆளுமை என 7 துறைகளில்…

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் மாவட்டந்தோறும் வழங்கப்பட்டு வரும் ‘எழுமின் விருதுகள்’ நிகழ்ச்சி முதலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றது. கல்வி, மருத்துவம், வணிகம், சேவை, விவசாயம், விளையாட்டு, ஆளுமை என 7 துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மக்கள் தேர்ந்தெடுத்த நிலையில், அவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

செயற்கரியச் செயலைச் செய்து அங்கீகார வெளிச்சமின்றி சோர்ந்து போகும் உள்ளங்களை விழித்தெழச் செய்ய, செய்தியில் மட்டுமல்ல, சமூக சேவையிலும் முன்னணி வகிக்கிறது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி. இவ்வாறு பொறுப்பும் பொதுநலனும் சார்ந்து செயல்படும் நியூஸ் 7 தமிழ், உங்கள் பகுதிக்கே வந்து மண்ணின் மைந்தர்களை பெருமைப்படுத்த எழுமின் விருதுகள் வழங்கி வருகிறது.

கல்வி, மருத்துவம், வணிகம், சேவை, விளையாட்டு, விவசாயம், ஆளுமை ஆகிய 7 துறைகளில், உங்கள் மாவட்டங்களில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே தேர்வு செய்து அனுப்பலாம். அவ்வாறு வரும் பதிவுகளில் இருந்து தேர்வுக்குழுவினர் விருதாளர்களை தேர்வு செய்யவர். அந்த வகையில் எழுமின் விருது வழங்கும் முதல் நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அக்டோபர் 16-ம் தேதி, நாளந்தா இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி & ஜூனியர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் தலைமையில் நடைபெற்ற எழுமின் விருது வழங்கும் நிகழ்ச்சியில், நாளந்தா இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி & ஜூனியர் கல்லூரி தாளாளர் புவியரசன், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு சுற்றுச்சூழல், விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விருது பெற்றோர் பட்டியல்:

கல்விக்கான எழுமின் விருதை – IVDP தொண்டு நிறுவனத்தின் தலைவர் குழந்தை ஃபிரான்சிஸ் பெற்றார்.


மருத்துவத்திற்கான எழுமின் விருதை – சூர்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இந்தியா பி.லிட்., மருத்துவர் வினுதா பாஸ்கரன் பெற்றார்.


வணிகத்திற்கான எழுமின் விருதை – KVS GROUPS இயக்குநர் K.V.S. சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.


சேவைக்கான எழுமின் விருதை – அறம் சிகரம் தொண்டு அறக்கட்டளை கோபிநாத் பெற்றுக் கொண்டார்.


விவசாயத்திற்கான எழுமின் விருது டெல்லி தேசிய தோட்டக்கலை வாரியத்தின் இயக்குநர் பாலசிவபிரசாத்துக்கு வழங்கப்பட்டது.


விளையாட்டுக்கான எழுமின் விருது தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத்தலைவர் மதியழகன் எம்.எல்.ஏ.க்கு வழங்கப்பட்டது.


ஆளுமைக்கான எழுமின் விருதை சிறப்பு வட்டாட்சியர் சரவணன் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக கிருஷ்ணகிரி மண்டல நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் திருலோகசந்தர் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, ஆர்த்தி எழுமின் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சியும் அரங்கேறின.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.