நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி; திருப்பூரில் அமைச்சர் தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம்

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலியாக திருப்பூரில் நாளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. தவிக்கும் தலைநகரம், சென்னையில் பாதுகாப்பான ஷாப்பிங், மாமதுரை அவலங்கள் ஆகிய பெயர்களில் நியூஸ்7…

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலியாக திருப்பூரில் நாளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

தவிக்கும் தலைநகரம், சென்னையில் பாதுகாப்பான ஷாப்பிங், மாமதுரை அவலங்கள் ஆகிய பெயர்களில் நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் இறங்கியது. அதைத் தொடர்ந்து திக்குமுக்காடும் திருப்பூர் என்ற பெயரில் இன்று திருப்பூரில் நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் ஈடுபட்டது.

திருப்பூர் மாநகராட்சிககுட்பட்ட பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இன்று நியூஸ் 7 தமிழ் நாள் முழுவதும் தொடர் நேரலை செய்தது. அதில் பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சாலை பணிகளால், சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீர், வீடுகளுக்கு உள்ளேயும் செல்லும் அவலம், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீரை விரைந்து அகற்றி மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கள ஆய்வு மூலம் எடுத்துசெல்லப்பட்டது.

இந்நிலையில் நமது கள ஆய்வு செய்தி எதிரொலியாக நாளைய தினம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

இதேபோல், மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.