பன்னாட்டு அரிமா சங்கம் மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் இணைந்து செங்குன்றத்தில் பொங்கல் விழா கொண்டாடினர். இதில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று பாரம்பரிய முறைப்படி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நியூஸ் 7 தமிழ் அன்பு பாலத்துடன் இணைந்து சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அந்த ஊர்வலத்தில் சிலம்பம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
மேலும் இந்த விழாவில் விவசாயிகளை சிறப்பு படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளை, நெற்பயிர் உழவு வாகனம் ஆகியவற்றையும் காட்சிப்படுத்தியிருந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர் B.V ரவீந்திரன், மாவட்ட தலைவர் கோபி ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.








