கடலூரில் என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்ட இரண்டு நாள் நடைபெற்ற நடைபயணம் நிறைவு பெற்றது.
கடலூரில் என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,25ஆயிரம் ஏக்கர் வேளாண் விளைநிலங்களைப் பறிக்கத்துடிக்கும் என்எல்சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டார்.மொத்தம், இரண்டு நாள் நடைபெற்ற நடைப்பயணம் நிரைவு பெறும் மும்முடிச்சோழன் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிலத்தை எடுத்து தனியாரிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்சினை என்றால் ஓடோடி பார்ப்பவர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. ஆனால் அவரது மகன் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றார் என அவர் பேசினார்.
அமைச்சரின் இதே போக்கு தொடர்ந்தால் வண்டியில் சிவப்பு விளக்கு (Siren) எரியாது.என்எல்சி தரகராக வேலை செய்யாதீர்கள். தன்நூற்று இருந்த இடம் நெய்வேலியால் அது தற்போது இல்லை. 5 வருடத்தில் 500 பேருக்கு வேலை என என்எல்சி சொல்கிறது.ஆனால் 5 வருடத்தில் என்எல்சியும் இருக்காது.நீங்களும் இருக்க மாட்டீர்கள் அவர் கூறினார்.
மேலும், என்எல்சி இழப்பீடு உயர்த்தியுள்ளது என அமைச்சரும்,ஆட்சியரும் கூறிவிட்டார்கள் என எவரும் நம்ப வேண்டாம். இப்போது நான் அமைதி வழியில் சென்று வருகின்றேன். இன்னும் என்எல்சி இதே போக்கை கடைப்பிடித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். தமிழக முதல்வரின் கடமை விவசாயிகளைப் பாதுகாப்பது தான் என அவர் பேசினார்.
மேடையில் பேசிய பின் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் நிறைவு பெற்றது.