முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது இன்று நடந்து முடிந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணியானது 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் ஷிகார் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், மற்றும் சுப்மன் கில் ஆகிய மூவர் அரைசதம் அடித்து அணிக்கு வலு சேர்த்தனர்.

அணியில் ஓபனர்கள் ஷிகர் தவன் 72 (77), ஷுப்மன் கில் 50 (65), ஸ்ரேயஸ் ஐயர் 80 (76) ஆகியோர், அபாரமாக விளையாடி ரன்கள் குவித்து அசத்தினார்கள். அவர்களை தொடர்ந்து சஞ்சு சாம்சன் 36 (38), வாஷிங்டன் சுந்தர் 37 (16) ஆகியோர் தங்களது பங்கிற்கு ரன்களை சேர்த்ததால், இந்திய அணி 50 ஓவர்களில் 306/7 ரன்களை எடுத்து அசத்தியது.

அதனைத் தொடர்ந்து 307 என்ற இலக்குடன் களமிரங்கிய நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் மூன்றே விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பாக டாம் லேதம் 145 ரன்களும், வில்லியம்சன் 94 ரன்கள் அடித்தனர். டாம் லதாம் 104 பந்துகளில் 19 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 145 ரன்களும், கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர்களுடன் 94 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை இருந்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நலத்துறை அமைக்க நடவடிக்கை: முதலமைச்சர்

Gayathri Venkatesan

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலக இரவு காவலாளி மர்மான முறையில் மரணம்

Web Editor

பாடகர் சித்து கொலை வழக்கு- ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

Web Editor