புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உலகப் புகழ்பெற்ற வேளாங்கன்னி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, வேளாங்கன்னி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. பேராலய…

புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

உலகப் புகழ்பெற்ற வேளாங்கன்னி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, வேளாங்கன்னி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர். தமிழ் முறைப்படி பேராலய அதிபர் மற்றும் பங்கு தந்தைகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேபோல், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில் குடும்பத்துடன் ஆயிரத்துகும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வெளி மாவட்டத்தில் இருந்தும் ஏராளாமானோர் கலந்து கொண்டனர். திருப்பலி நிறைவுற்றதும், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply