படத்தின் சில சண்டைக் காட்சி மற்றும் விஜய் மற்றும் ராஷ்மிகா நடனமாடும் காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் நடந்து முடிந்தது.
பின் சண்டைக் காட்சிகளுடன் கூடிய படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் மூன்றாம் கட்டமாக நடந்து வந்துவந்தது. இந்நிலையில் தான் இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது.அந்த லீக் ஆன வீடியோவில் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள சரத்குமாரை மருத்துவமனையில் அனுமதிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. காட்சியில் விஜய், பிரபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே படத்திலிருந்து முக்கிய காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆனதால், மீண்டும் இதுபோல் சம்பவம் நேரக்கூடாதென இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அப்படி இருந்தும் படத்தின் சில சண்டைக் காட்சி மற்றும் விஜய் மற்றும் ராஷ்மிகா நடனமாடும் காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
தற்போது படப்பிடிப்பு முடிந்து விஜய் சென்னை திரும்பியுள்ளார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு கட்டங்களாக நடக்கும் எனவும் பட்டதின் மொத்த காட்சிகளையும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளி பண்டிகையில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் படத்தின் இதர காட்சிகள், டப்பிங் பணிகளை விரைந்து முடித்து விரைவில் பாடல்கள், டீசர், மற்றும் ட்ரெலர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







