ஓணம் திருநாளையொட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நம் கேரள மக்களின் பாரம்பரியம் மிக்க, பண்பாடு நிறைந்த திருவிழாவான ஓணம் பண்டிகை நன்னாளில் அனைத்து சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயப் பூர்வமான ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
நம் கேரள மக்களின் பாரம்பரியம் மிக்க, பண்பாடு நிறைந்த திருவிழாவான ஓணம் பண்டிகை நன்னாளில் அனைத்து சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயப் பூர்வமான ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்.#Onam2022 pic.twitter.com/KRHgQ5FAFP
— Dr.L.Murugan (@Murugan_MoS) September 8, 2022
அதேபோல, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓணம் பண்டிகையையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்
ഓണാശംസകൾ | #HappyOnam pic.twitter.com/7rv1JsL9vX— Captain Vijayakant (@iVijayakant) September 8, 2022
-ம.பவித்ரா







