புதுச்சேரியில் எந்தவித அரசு உதவிதொகையும் பெறாத வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான கோப்பிற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மாநிலத்தில் எந்த விதமான உதவி தொகையும் பெறாத வருமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதற்கான கோப்புகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
மேலும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இந்த உதவித்தொகை வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அந்த கோப்பிற்கு அனுமதி அளித்து உள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தற்போது கோப்பிற்கு ஒப்புதல்
அளித்துள்ளதால் புதுச்சேரியில் எந்தவித அரசு உதவித்தொகையும் பெறாத வறுமை
கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்
வழங்குவதற்கான திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







