அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு!

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை,  புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  திமுக,…

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை,  புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், அமமுக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதில், அதிமுக சார்பில் பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  ஆனால் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை.
இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.

 

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.  கூட்டணி தொடர்பாக  எடப்பாடி பழனிசாமியை, கிருஷ்ணசாமி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.