முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்; சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்

வரும் 28ஆம் தேதி முதல் போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராதம் நடைமுறைத்தப்படும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

‘சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள் சாலை மூடல் மற்றும் மாற்றுப் பாதைகள் குறித்த கூகுள் மேப்பில் அறிந்து கொள்ள பயன்படும் Road Ease (APP) செயலியை அறிமுகப்படுத்தித் துவக்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிகழ்ச்சியில் லெப்டான் நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார் தட்வாலியா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். Road Ease செயலியை துவக்கி வைத்த பின் பேசிய சங்கர் ஜிவால், சாதாரண கூகுள் மேப் மூலம் சாலையின் மாற்றுப் பகுதியைக் காண்பிக்க 15 முதல் ஒரு மணி நேரம் ஆகும். இந்த செயலியின் மூலம் 15 நிமிடத்திற்குக் குறைவாகவே உடனடியாக மாற்றுப் பாதை காண்பிக்கும்.

இந்த செயலியின் முன்மாதிரியைப் பார்த்த பின்பே அறிமுகப்படுத்துகிறோம். அதிகப்படியாக OLA,uber போன்ற வாகன ஓட்டிகள் கூகுள் மேப்பை பயன்படுத்துகின்றனர் இதனால் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலியைப் பயன்படுத்து மூலம் எளிதில் சென்று அடையும் வகையில் அமைந்து இருக்கிறது.

வரும் 28ஆம் தேதி முதல் போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராதம் அமல்படுத்தப்படும். குறிப்பாகத் தலைக்கவசம் அணியாதவருக்கு தற்போது நூறிலிருந்து 500 வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது புதிய அபராதமாக 1500 ரூபாய் வசூல் அளிக்கப்படும்.

வாகன சாகனத்தில் ஈடுபடுபவருக்கு முன்பு 500 ரூபாய் வசூலிக்கப்பட்டது தற்போது முதல் அபராதம் 15 முதல் இரண்டாம் அபராதமாக 25,000 வசூல் அளிக்கப்படும்.
நான்கு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு சீட் பெல்ட் அணியாதவருக்கு 1000 ரூபாய் அபராதம், இருசக்கர வாகனத்தில் அதிவேக ஒலிபெருக்கி பயன்படுத்தினால் முதல் அபராதம் 1000, இரண்டாம் அபராதம் 2000 ரூபாய் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்லும் பொழுது போக்குவரத்து தொல்லை கொடுப்பது குற்றம் என தெரிவித்தார்.

அனுமதிக்கப்பட்ட நேரம் மட்டுமே பொது இடங்களில் சாலைகளில் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் மீறினால் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பட்டாசு விற்பனையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நேரம் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram