எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராகும் வாய்ப்பு வந்தது: ஆளுநர் தமிழிசை

எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராகம் வாய்ப்பு வந்தது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னை கிண்டியில் “Rediscovering Self in Selfless Service” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில்…

எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராகம் வாய்ப்பு வந்தது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

சென்னை கிண்டியில் “Rediscovering Self in Selfless Service” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், எனது அப்பா ஒரு தேசிய கட்சித் தலைவர், அதற்கு நேர்மாறான தேசியக் கட்சியில் நான் தலைவராக இருந்தது தமிழகத்திற்கு செய்த மிகப்பெரும் கடமையாக நினைக்கிறேன். நான் ஆளுநராக இருக்கும் மாநிலங்களில் ஆட்சிக்கு எந்திவிதமான இடையூறும் செய்வதில்லை. ஆனால் என் பணி, ஆட்சிக்கு இடையூறாக இருப்பதாக ஆட்சியாளர்கள் சில நேரம் நினைக்கின்றனர். குடியரசு தினத்தில் என்னை கொடியேற்றவிடவில்லை. ஆளுநர் உரையை என்னை ஆற்றவிடவில்லை.

தெலுங்கானாவிலும், புதுச்சேரியிலும் முழுமையாக பணியாற்றுகிறேன். தமிழகம் மீது முழுமையான அன்புடன் இருக்கிறேன். நான் மருத்துவராக இருந்தபோது என்னை மக்கள் பார்த்ததற்கும், தமிழக பாஜக தலைவரான பிறகு பார்த்ததுக்கும் இடையே வித்தியாசம் இருந்த்து.

நான் மருத்துவராக இருந்த போது பார்ப்பவர்கள் அஞ்சும் வகையில் நான் இருப்பேன். ரஜினிகாந்த் 16 வயதினிலே படத்தில் அழைக்கப்படது போல பரட்டை என்று என்னை சிறுவயதில் அழைத்துள்ளனர். ஆனால் பரட்டைத் தலைமுடி எனக்கு பலமாகிவிட்டது. மழை வெள்ளம் பாதித்த பகுதிக்கு தெலுங்கானா முதல்வரை வர வைத்த பெருமை எனக்கு இருக்கிறது. நான் செல்லப்போகிறேன் என்று தெரிந்த பிறகு தான் அந்த பகுதிக்கு முதலமைச்சர் சென்றார். தமிழகத்தில் என்னை பற்றி Troll செய்தனர். அரசியலில் நாகரிகம் இருக்க வேண்டும். எவ்வளவு உளி தாக்கினாலும் நான் சிலையாகத்தான் மாறுவேன். என்னை செதுக்கியவர்களை விட ஒதுக்கியவர்கள்தான் அதிகம்.

ஆளுநரான எனக்கு அதிகாரம் இருந்தாலும், தனி விமானத்தை ஒருபோதும் எனது பயணங்களுக்கு நான் பயன்படுத்தியதில்லை. சாப்பாட்டு பணத்தை கூட நான் தெலுங்கானாவில் செலுத்தி விடுகிறேன். 90 வயதில் பாதயாத்திரை செல்வேன் என்று என் தந்தை சொல்லிக்கொண்டிருக்கிறார். யார் என்ன சொன்னாலும், தமிழ்நாட்டில் நான் மூக்கை மட்டுமல்ல, தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், தமிழ்நாட்டில் காலும் வைப்பேன். ஆளுநர் கருத்து சொல்வதை சட்டம் தடுக்காது, நான் தமிழகத்தில் தவறு நடந்தால் அதை கண்டித்து கருத்து சொல்வேன்.

எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் மக்களோடு மக்களாகத் தான் இருப்பேன் என்று கூறிவிட்டேன். மத வேறுபாடு அரசியல்வாதிகளிடம் தான் இருக்கிறது. நான் பிரபலமான, பெரிய மருத்துவராக இருந்தேன். எனது வருமானத்தை விட்டு இன்று பதவியில் இருப்பது மக்களுக்காகத் தான். எப்போதும் இயல்பாக மக்களோடு மக்களாக, மக்களுடன் இருக்கும் வாழ்க்கை தான் எனக்கு வேண்டும். அரசியலில் எப்போதும் எனது பங்கு இருக்கும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.