மதுரையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை : 85 ஏக்கர் நிலத்தில் மண் பரிசோதனை

மதுரையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 85 ஏக்கர் இடத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில்…

மதுரையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 85 ஏக்கர் இடத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான சிறைச்சாலையாக விளங்ககூடிய மதுரை மத்திய சிறைச்சாலை கடந்த 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது சுமார் 157 ஆண்டுகள் பழமையான இந்த சிறைச்சாலையில் 1500 க்கும் மேற்பட்ட
கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக போதுமான வசதியின்மை, நகரில்
போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வசதிகளை மேம்படுத்த இடம்
பற்றாக்குறை நீடித்து வருகின்றது. இதனால் சிறைச்சாலையை மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிக்கு மாற்ற செய்ய சிறை நிர்வாகம் கோரிக்கை வைத்தது.

இந்த கோரிக்கையை  ஏற்ற தமிழக அரசு மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகாவிற்கு உட்பட்ட இடைப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மதுரை மத்திய சிறைச் சாலை அமைப்பதற்காக 85 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்

மேலும் இது தொடர்பான விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் சென்னையில்
உள்ள புழல் சிறைக்கு இணையாக அனைத்து வகையான பாதுகாப்பு வசதிகளுடன் சிறைச்சாலை கட்டப்பட உள்ளது. புதிதாக கட்ட உள்ள சிறைச்சாலையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், பெண்கள் சிறை மற்றும் நூலகங்கள், தொழிற்சாலைகள், பிரமாண்ட சமையல் கூடங்கள்,காவலர் குடியிருப்பு, காவலர் அங்காடி, தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான பிளாக்குகளுடன் பசுமையான முறையில் மதுரை மத்திய சிறை அமைக்கப்பட உள்ளது.

மதுரை இடையபட்டியில் புதிதாக கட்டப்பட உள்ள மத்திய சிறைச்சாலைக்கு தமிழக அரசு
விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி விசுவநாதன் மதுரை மத்திய சிறைக்காக புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தினை நேரில் ஆய்வு செய்தார்.

புதியதாக அமைய உள்ள இடத்தில் 50 இடங்களில் மண் பரிசோதனை நடத்துவதற்காக சுமார் 9 லட்ச ரூபாய் மதிப்பில் ஒப்பந்த புள்ளியானது விடப்பட்ட நிலையில் தற்போது மண் பரிசோதனை நடத்தப்பட்டு அதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 17 லட்ச ரூபாய் செலவில் புதியதாக அமையுள்ள சிறைச்சாலையின் வரைபடம் தயாரிப்பதற்கு தற்போது ஒப்பந்தம் இடப்பட்டு அதற்கான பணிகளை தொடங்கி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.