முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிதாக 1,544 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், 1,54,685 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் இதில் 1,544 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 24 ஆயிரத்து 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,576 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,74,518 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,055ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 194 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 147 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் 217 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 115 பேருக்கும், செங்கல்பட்டில் 112 பேருக்கும் புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. அதிகபட்சமாக  சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

75 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

Gayathri Venkatesan

மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 கட்டணம்!

எல்.ரேணுகாதேவி

10,11-ம் வகுப்பு துணைத் தேர்வு: மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி

Ezhilarasan