தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 5,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாகக் குறைந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக 6…

தமிழ்நாட்டில் புதிதாக 5,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாகக் குறைந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக 6 ஆயிரத்துக்கும் கீழாக பாதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 5,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 817 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 ஆயிரத்து 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 65 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து 7 ஆயிரத்து 159 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 23 லட்சத்து 90 ஆயிரத்து 783 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 91 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலும் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் புதிதாக 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 315 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஈரோட்டில் 530 பேருக்கும் சேலத்தில் 343 பேருக்கும் கோவையில் 649 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 23 பேருக்கும் ராமநாதபுரத்தில் 24 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.