கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாயுள்ளத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதியுதவி திட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதரவற்ற குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு, இரண்டு பெற்றோர்களையும் இழந்த பிரிவில் 92 குழந்தைகளும், பெற்றோரில் ஒருவரை இழந்த பிரிவில் 3,409 குழந்தைகளும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை பொறுத்தவரை 18 வயதிற்கு உட்பட்டவர்களே குழந்தைகள் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். கொரோனாவில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளைக் காப்பாற்றி, கரை தூக்கிவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருணை உள்ளத்தில் உருவான திட்டம் இந்த திட்டம், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திட்டம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகளுக்கு, ரூ. 5 லட்சம் அக்குழந்தைகளில் பெயரில் வைப்புத்தொகையாக தமிழ்நாடு பவர் கார்ப்பரேஷனில் செலுத்தப்படும். மேலும் இந்த குழந்தைகள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை அவர்களுக்கான கல்விச் செலவை ஏற்பதோடு, மாதாந்திர பராமரிப்புத் தொகையாக ரூ.3000 வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய சிந்தனையில் உருவான இந்த சிறப்புமிகு திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தவறான செய்திகளை வெளியிட்டு மக்களின் மத்தியில் வீணான குழப்பதை யாரும் ஏற்படுத்த வேண்டாம் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.