ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7 : 30 மணிக்கு தொடங்குகிறது.
லக்னோவுடனான கடைசி ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியுற்றது. இதனால் ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க அடுத்த வரவுள்ள இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும் இன்றைய ஆட்டத்தில் முன்னாள் சென்னை அணி கேப்டன் தோனி களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கெ ஏற்றார் போல் தோனி பயிற்சி செய்யும் காணொலிகளும் இணையத்தில் வெளியாகின.
தசை பிடிப்பு காரணமாக நடப்பு தொடரின் எந்த ஆட்டத்தில் தோனி களமிறங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இன்றைய போட்டியே தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி என்றும் அவர் ஓய்வு பெற உள்ளதாகவும் தகவல்கள் இணையத்தில் வலம் வருகிறன்றன.
இந்த நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியை காண தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் வரவுள்ளதக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் போட்டி நடைபெறும் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.




