முக்கியச் செய்திகள் இந்தியா

மீன்களுக்கான நோய்களை அறிய புதிய செயலி: மத்திய அரசு அறிமுகம்

மீன்களுக்கான நோய் குறித்த தகவல்களை அறிய மத்திய அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை தேசிய உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில், மரபணு மேம்பாட்டு திட்டத்தை, மத்திய மீன் வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், “நம் நாட்டில் மீன்களுக்கு ஏற்படும் நோய் பற்றிய தகவல்களை தெரிவிக்க, ‘ரிப்போர்ட் ஃபிஷ் டிசீஸ்’ என்ற பெயரில் ஒரு செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நம் மீன்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளை மாவட்ட மீன் வள அதிகாரிகளுக்கு நேரடியாக தெரிவிக்க முடியும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல, விஞ்ஞானிகளிடமிருந்து அறிவியல் பூர்வமான உள்ளீடுகள் பெற்று தொழில்நுட்ப ரீதியாகவும் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து இறால்களுக்கு காப்பீட்டு திட்டத்தை மத்திய வேளாண் ஆய்வுக் குழுவின் உவர் நீர் மீன் வளர்ப்புக்கான மத்திய நிறுவனம் தொடங்கியுள்ளது. புயல், வெள்ளம், நோய் பரவல் ஆகியவற்றால் இறால் வளர்க்கும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்தத் திட்டம் உதவும்.

இதையும் படிங்க: ஆதார் அட்டையில் 123 வயது… அச்சுப்பிழையால் தவிக்கும் 41 வயது பெண்!

அடுத்த 3-5 ஆண்டுகளுக்கு உள்நாட்டு வெள்ளை இறாலில் புதிய வகையை உருவாக்க விஞ்ஞானிகள் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்தியாவில் இருந்து 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதியாகின்றன. நாட்டில் மீன்வள உற்பத்தியை கூடுதலாக 70 லட்சம் டன் அதிகரிக்கவும், மீன் ஏற்றுமதி வருவாயை 2024-25ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “கடந்த 2014ம் ஆண்டில் இருந்து தமிழக மீன்வளத் துறைக்கு சுமார் ரூ. 3,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு 625 கப்பல்கள் வாங்க நிதி வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம், சென்னை, நாகை, கடலூர் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு ரூ. 8,175 கோடியாக இருந்த இறால் ஏற்றுமதி, கடந்தாண்டு ரூ. 42,706 கோடியாக உயர்ந்துள்ளது. இறால் ஏற்றுமதியில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.” என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2வது ஒரு நாள் போட்டி; இந்தியாவுக்கு 279 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பு

G SaravanaKumar

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

Halley Karthik

நடிகர் நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா”

Sugitha KS