முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காணொலி மூலம் திருமணம்; இடைக்கால தடைவிதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவிலுள்ள காதலி, அமெரிக்காவிலுள்ள காதலனுடன் ‘காணொலியில்’ திருமணம் செய்ய, அதை பதிவு செய்து திருமணச் சான்று வழங்க சார்பதிவாளருக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக் காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை சார்ந்தவர் வம்சி சுதர்ஷினி. இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் காதலுடன் திருமணம் செய்ய அனுமதி கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நாள் பொறியியல் படித்துள்ளேன். அமெரிக்காவிலுள்ள ராகுல் எல்.மதுவும், நானும் காதலித்தோம். அவர் இந்தியாவில் பிறந்தவர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். அவர் திருமணத்திற்காக இந்தியா வந்தார். சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய எங்களுக்கு தகுதி உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும்: பிரதமரின் சகோதரர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

திருமணத்தை பதிவு செய்யக்கோரி மணவாளக்குறிச்சி சார்பதிவாளருக்கு விண்ணப்பித்தோம். அவரது முன்னிலையில் ஆஜரானோம். ஆனால் அவர் காரணங்கள் இன்றி எங்களது விண்ணப்பத்தை நிராகரித்தார். விசாகாலம் முடிந்ததால் ராகுலால் மேலும் காத்திருக்க முடியவில்லை. அதனால் அவர் அமெரிக்கா சென்றுவிட்டார்.மீண்டும் அவரால் தற்போது இந்தியா வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இருவருக்கும் காணொலி மூலம் திருமணம் செய்து, அதை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்றிதழ் வழங்க சார்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவில் ஆன்லைன் மூலம் மெய்நிகர் இருப்பை
காண்பித்து திருமணம் நடத்த சிறப்பு திருமணச் சட்டம் தடையாக இருக்காது. மனுதாரர்
திருமணத்தை நடத்த சட்டம் தடை இல்லை. மனுதாரர் ராகுலிடமிருந்து பவர் ஆப்
அட்டர்னியை பெற்றுள்ளார். மனுதாரர் தனது மற்றும் ராகுல் சார்பில் திருமண சான்று புத்தகத்தில் கையொப்பமிடலாம். பின் சார்பதிவாளர் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மணவாளக்குறிச்சி சார்பதிவாளர், ”தனி நீதிபதியின் உத்தரவு சிறப்பு திருமண பதிவு சட்டத்திற்கு எதிரானது. தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கெளரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தும், வம்சி சுதர்ஷினிக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை மார்ச் 21க்கு
தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு

G SaravanaKumar

“7,50,000 விண்ணப்பங்கள்- வேலையில்லா திண்டாட்டத்தையே காட்டுகிறது”- ப.சிதம்பரம்

Web Editor

டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் 1.03 கோடி வரை அபராதம் வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகர்

Web Editor