மேட்டுப்பாளையம் சாலைகளில் உலா வரும் யானைகள்; பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் வனத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் சாலையோரம் காட்டுயானைகள் உலாவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதி நீலகிரி மலைத்தொடரின் அடிவார பகுதியாக உள்ளது. இங்குள்ள வனத்தில்…

மேட்டுப்பாளையம் வனத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் சாலையோரம் காட்டுயானைகள் உலாவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதி நீலகிரி மலைத்தொடரின் அடிவார
பகுதியாக உள்ளது. இங்குள்ள வனத்தில் காட்டு யானைகள், மான், காட்டு மாடு, செந்நாய், புலி, சிறுத்தை, கரடி என ஏராளமான பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்த வனப்பகுதியில் தற்போது கோடைக்கால சீசன் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்கவும்: காணொலி மூலம் திருமணம்; இடைக்கால தடைவிதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவு

இதனால் வனத்தில் உள்ள மரங்கள், செடிகள் கொடிகள் காய்ந்து வரும் நிலையில் அங்குள்ள வன உயிரினங்கள் தற்போது மெல்ல வனத்தை விட்டு வெளியேற தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் அதிகாலை வரை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் ஓடந்துரை பகுதியில் வனத்தில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேவைகளுக்காக வெளியேறிய காட்டு யானைகள் சாலை ஓரத்தில் அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்தது.
இதனை அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் புகைப்படம் மற்றும் வீடியோ
எடுத்தனர். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வன உயிரினங்கள் நடமாட்டம் குன்னூர் சாலை மற்றும் கோத்தகிரி சாலையில் அதிகமாக உள்ளது. அதே சமயத்தில் அந்த
சாலையினை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் யானைகளை புகைப்படம் எடுப்பது செல்பி
எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் யானைகள் தாக்கும் நிலை ஏற்படும். எனவே
இரவு நேரத்தில் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்குவதுடன் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கவும் பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.