75வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவிற்கு பல்வேறு அரசியல் தலவர்கள், நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா சுதந்திர தின விழாவை முன்னிட்டு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்,
அப்பதிவில் அவர் கூறியதாவது; இன்று நாம் நமது 75-வது சுதந்திர ஆண்டின் மகிழ்ச்சியை கொண்டாடும் இந்த வேளையில், தேசத்தின் பெருமையே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை மறந்து விடக்கூடாது. பல மொழிகள், மதங்கள், இனங்கள் , கலாச்சாரங்களை நாம் கொண்டு இருந்தாலும் இந்தியா எனும் ஒரே தேசத்தால் பிணைக்கப்பட்டுள்ளோம். நம்மை போன்ற தனித்துவமிக்க நாடு வேறு எதும் இல்லை.
சுதந்திரத்தை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் புரிந்து கொள்ள மாட்டோம், எனவே அதை நினைவில் கொள்வோம், மேலும் அந்த சுதந்திரத்தை ஒருபோதும் விட்டு விடக்கூடாது. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவு கூர்வோம். நாமும் வருங்கால சந்ததியினரும் நமது அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை நிலைநாட்டுவோம். சுதந்திர தின வாழ்த்துக்கள் என அப்பதிவில் அவர் கூறியிருந்தார்.
இதுபோலவே இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பி. சி. ஸ்ரீராம் சமூக வலைதளத்தில் சுதந்திர தின விழாவிற்கு வாழ்த்து பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நான் என் நாட்டை விரும்புகிறேன், ஆனால் இந்த அரசை அல்ல,ஜெய்ஹிந்த் என கூறியுள்ளார்.







