முக்கியச் செய்திகள் இந்தியா

சிகரம் தொட்ட சிங்கப்பெண் பிரியங்கா மங்கேஷ்!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா மங்கேஷ் மோஹிட் உலகின் 10-வது உயரமான மலையான அன்னபூர்ணாவில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனைப்படைத்துள்ளார்.

பிரியங்கா மங்கேஷ் மோஹிட் சிறுவயதிலிருந்தே மலையேறுவதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி நேபாள நாட்டில் உள்ள 8,091 மீட்டர் உயரம் கொண்ட அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிய முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலகின் மிகவும் ஆபத்தான அன்னபூர்ணா மலையில் பலர் ஏற முயன்று பாதியிலேயே தங்களுடைய முயற்சியை கைவிட்டுவிடுவார்கள. இந்த மலையில் இதுவரை ஏற முயன்று 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு இந்தியர்கள் மட்டுமே அன்னபூர்ணா சிகரத்தில் ஏறியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண்கள் ஆவார். இந்நிலையில் அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனையைப் பிரியங்கா படைத்துள்ளார்.

பிரியங்கா தன்னுடைய 21-வயதிலேயே இமயமலையில் ஏறிய சாதனைப்படைத்துள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் இமயமலை சிகரத்தில் ஏறிய 3-வது நபர் என பாராட்டப் பெற்றவர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டான் படம் நிகழ்த்திய வசூல் சாதனை!

EZHILARASAN D

போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் செலுத்த கியூஆர் கோடு

Web Editor

உ.பி.யில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை

Halley Karthik