முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள்

கூகுள் டூடுல்ஸ் கௌரவித்துள்ள வேரா இக்னாடிவ்னா யார்?


எல்.ரேணுகாதேவி

கட்டுரையாளர்

உலகம் முழுவதும் இன்று இணையதளத்தைப் பயன்படுத்தும் அனைவரும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள வேரா இக்னாடிவ்னா கெட்ராய்ட்ஸ் டூடுல்ஸ்சை தாண்டிதான் செல்லவேண்டும்.

யார் இந்த வேரா இக்னாடிவ்னா கெட்ராய்ட்ஸ்? அவருடைய 151-வது பிறந்தநாளையொட்டி ஏன் கூகுள் டூடுல்ஸ் வெளியிட்டுள்ளது? என பல கேள்விக்குள் இந்த டூடுல்ஸ்சை பார்க்கும்போது தோன்றுகிறது.

நடுவில் இருப்பவர் வேரா இக்னாடிவ்னா கெட்ராய்ட்ஸ்

மன்னருக்கு எதிராக போராடிய இளவரசி

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த வேரா இக்னாடிவ்னா கெட்ராய்ட்ஸ் குடல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துகாட்டிய முதல் மருத்துவர்களில் ஒருவர், ரஷ்யாவின் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர், அந்நாட்டின் முதல் மருத்துவ பேராசிரியர், இளம் போராளி, எழுத்தாளர், கவிஞர் என பல பன்முக திறமைகளால் போற்றப்பட்டவர்.

வேரா இக்னாடிவ்னா கெட்ராய்ட்ஸ் ரஷ்யாவில் உள்ள ஸ்லோபோடிஷே கிராமத்தில் 1870-ம் ஆண்டு ஆர்த்தடாக்ஸான நிலப்பிரவு குடும்பத்தில் பிறந்தவர். இளவரசியான வேரா தன்னுடைய சகோதரர் செர்ஜியின் மறைவுக்கு பிறகு மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உடற்கூறியல் மருத்துவரான ‘peter lesgaft’ தன்னுடைய மருத்துவ படிப்பை வேரா இக்னாடிவ்னா. இதேகாலகட்டத்தில் ரஷ்யாவின் மன்னர் ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட இடதுசாரி இளைஞர் குழுவிலும் வேரா ஈடுபட்டார். அதற்காக அவர் 1892-ம் ஆண்டு கைது செய்யப்பட்டர். பின்னர் விடுதலைச் செய்யப்பட்ட அவர் ரஷ்யாவிலிருந்து தப்பித்து சுவிட்சர்லாந்து நாட்டிற்குச் சென்றார். அங்கு தன்னுடைய மருத்துவ படிப்பை 18-ம் நூற்றாண்டின் முடிவிலும் 19-ம் நூற்றாண்டின் காலகட்டத்திலும் தொடங்கினார். அந்த காலகட்டத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் பெண்கள் மருத்துவம் படிக்க சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா ராணுவ வீரர்கள் மத்தியில் வேரா

முதல் அறுவை சிகிச்சை மருத்துவர்

சுவிட்சர்லாந்து நாட்டில் தன்னுடைய மருத்துவ படிப்பை முழுமையாக முடித்த வேரா இக்னாடிவ்னா பின்பு 1901-ம் ஆண்டு ரஷ்யா திரும்பினார். ரஷ்யாவில் மருத்துவ பயிற்சி தேர்வில் தேர்ச்சிபெற்ற வேரா பின்னர் மால்ட்சோவ் சிமென்ட் தொழிற்சாலையில் அறுவை சிகிச்சை நிபுணராக நியமிக்கப்பட்டார்.

அங்கு 1895-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட விலை உயர்ந்த X-Ray, பிசியோதெரபி கருவிகளைப் பொருத்தி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவந்தார். இந்த மருத்துவமனையில் ஒரே ஆண்டில் 103 அறுவை சிகிச்சைகளை அவர் மேற்கொண்டார். அவர்களில் 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

சிமென்ட் தொழிற்சாலையில் பலர் கனரக இயந்திரங்களைக் கையாண்டதால் அவர்கள் பலருக்கு குடலிறக்க பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர். இதன்காரணமாக வேரா இக்னாடிவ்னா பெரும்பாலும் குடலிறக்க நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்றார். இதன்காரணமாக குடலிறக்க அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவர் என குறிப்பிடப்படுகிறார்.

மாளிகையின் முதல் பெண் மருத்துவர்

பின்னர் 1904-ம் ஆண்டு நடந்த ரஷ்யா – ஜப்பான் போரில் ராணுவ மருத்துவராக நியமிக்கப்பட்டார். இந்த போரில் இரண்டு தரப்பிலும் ஒரு லட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர். வேராவின் குறிப்பின்படி 700 பேருக்கு கால்களிலும் நெஞ்சில் 143 பேர்களுக்கும் 61 பேருக்கு குடலில் குண்டு அடிப்பட்டும் பாதிக்கப்பட்டனர் என தான் சிகிச்சை அளித்தவர்கள் குறித்து குறிப்பை எழுதியுள்ளார்.

ரயில் பெட்டி, பதுங்கு குழி என பல இடங்களை மருத்துவமனைகளாக மாற்றில் போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு அவர் சிகிச்சை அளித்தார். போர் சூழ்நிலை காலகட்டத்தில் வேரா ஆற்றிய பணிகள் காரணமா ரஷ்யாவில் வெகுவாக பாராட்டப்பட்டார்.

போருக்குப் பின்னர் ரஷ்யாவின் இம்பிரியல் மாளிகையில் மருத்துவராக பணியாற்ற நியமிக்கப்பட்டார். இதன்காரணமாக இம்பிரியல் மாளிகையில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மருத்துவர் என போற்றப்பட்டார்.

வேரா வேரா இக்னாடிவ்னா கெட்ராய்ட்ஸ் மருத்துவ சேவை காரணமாக அவர் முதல் உலகப்போரில் பணியாற்ற அனுப்பட்டார். இந்த காலகட்டத்தில்தான் ரஷ்யாவில் தொழிலாளர்கள் புரட்சி பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்காரணமாக ஜார் மன்னரின் உலகப்போரில் பணியாற்றும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன்னை தானே காயப்படுத்திக்கொண்டார் வேரா இக்னாடிவ்னா கெட்ராய்ட்ஸ்.

மருத்துவ சிகிச்சையின்போது வேரா

முதல் மருத்துவ பேராசிரியர்

பின்னர் தன்னுடைய சொந்த ஊரான காய்வ் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் 1929-ம் ஆண்டு மருத்துவ பேராசிரியராக தன் பணியைத் தொடங்கினார். மருத்துவராகப் பேராசிரியராக இருந்த காலத்தில் இவர் பல மருத்துவ ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். ரஷ்யாவில் மருத்துவ பேராசிரியராக ஒரு பெண் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக ஊட்டச்சத்து மற்றும் அறுவை சிகிச்சைக்கான காயங்கள் ஆற்றுவது குறித்து ஏராளமான மருத்துவ கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.

அதேபோல் நாவல், கவிதை, புத்தகங்கள் பலவற்றையும் அவர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக 1931-ம் ஆண்டு தன்னுடைய வாழ்க்கையை மையப்படுத்தி ‘Life’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட நாவல் முக்கியமானது.

வேரா இக்னாடிவ்னா கெட்ராய்ட்ஸ் சேவையைக் கௌரவிக்கும் விதமாக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ள Fokino, Bryansk oblast மருத்துவமனைக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மருத்துவத் துறையில் ஒரு பெண்ணாகப் பல மாற்றங்களை உருவாகத் தொடக்கப் புள்ளியாக இருந்த வேரா இக்னாடிவ்னா கெட்ராய்ட்ஸ் 1931-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட. பின்னர் 1947-ம் ஆண்டு தன்னுடைய 78 வயதில் காலமானார்.

Advertisement:
SHARE

Related posts

வெற்றி கொண்டாட்டங்களைவிடத் தொண்டர்கள் உயிரைக் காப்பதே தலையாய கடமை: மு.க ஸ்டாலின்

Halley karthi

ஒபிஎஸ்ஸை ஆதரித்து ரவீந்திரநாத் தேர்தல் பரப்புரை!

Saravana Kumar

ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை முறை

Gayathri Venkatesan