மன்மோகன் சிங் உடல் நிலை: சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கம்

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-யின் உடல் நிலை சீராக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது.…

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-யின் உடல் நிலை சீராக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த வரிசையில் நேற்று முன்னாள் பிரதமர் மன்கோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றைய தினத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். ‘டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் மன்மோகன் சிங் உடல் நிலை சீராக உள்ளது. அவருக்குச் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது, அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.