ஆசிய விளையாட்டு: தனிநபர் ட்ராப் ஷூட்டிங்கில் தங்கம் வென்றது இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் ட்ராப் ஷூட்டிங்கில் இந்திய வீராங்கனை நீரு தாண்டா தங்கம் வென்றார்.

2026-ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் உள்ள நகோயா மாகானத்தில் நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி தொடங்கிய நாள் முதல் தினந்தோரும் இந்தியா பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மகளிர் ட்ராப் ஷூட்டிங் தனிநபர் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் 302-க்கு 26 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தார். இதன்மூலம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தங்கப் பதக்கத்திற்கான இந்தியாவின் நீண்ட காத்திருப்புக்கு நீரு தண்டா முற்றுப்புள்ளி வைத்தார். அவர் 30 பந்துகளில் 28 பந்துகளை மிகச் சிறந்த துல்லியத்துடன் எறிந்து, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் இது இந்தியாவின் முதல் தனிநபர் தங்கப் பதக்கமாகவும், ஒட்டுமொத்தமாக ஐந்தாவது பதக்கமாகவும் அமைந்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ட்ராப் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தனிநபர் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இதன் மூலம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 5-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.