சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் லாசன்னே டயமண்ட் லீக் 2022 இல் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்நிலையில், நீரஜ் சோப்ரா 89.08 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் போட்டியின் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், அடுத்ததாக ஜூரிச்சில் செப்டம்பர் 7, 8ஆம் தேதிகளில் நடைபெற உள்ள டயமண்ட் லீக் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக் பைனலுக்கும் தகுதி பெற்றுள்ளார்.
முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச் சுற்றில் அவா் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் 88.13 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா