உத்தர பிரதேச மாநிலத்தில், படகு இன்ஜின் பழுதானதால், ஆற்றின் நடுவே நள்ளிரவில் சிக்கித் தவித்த 150 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், குஷிநகரில், கந்தக் ஆற்றில் நேற்றிரவு படகு ஒன்றில், 150 பேர் பயணம் செய்தனர். திடீரென படகின் என்ஜினில் உள்ள டீசல் குழாய் வெடித்ததால், ஆற்றின் நடுவே படகு நின்றுவிட்டது. எனினும், ஆற்றின் நீரோட்டம் காரணமாக, அந்த படகு 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டது.
இதனால், நள்ளிரவில், ஆற்றின் நடுவே என்ன செய்வது என தெரியாமல், அதில் பயணம் செய்தவர்கள் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோரக்பூர் நகர தேசிய பேரிடர் படையைச் சேர்ந்த குழு, உடனடியாக அந்த பகுதிக்குச் சென்று, படகில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் இறங்கினர்.
இரவு முழுவதும் நடைபெற்ற மீட்புப் பணியில், படகில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். படகில் இருநத அனைவரும் நாட்டுப்படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.







