ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அரசு ஊழியர் மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயம் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் போட்டியிடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் மீதான இன்றைய விசாரணையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அரசு ஊழியர் மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் “அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போட்டியிடக்கூடாது தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற உத்தரவுடன் வழக்கு ஏற்கெனவே ஒன்று நிலுவையில் உள்ளது. எனவே அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிடக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை சுற்றிக்கை அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயம் நிர்வாக தேர்தலில், அதன் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து. வழக்கு குறித்து பள்ளி கல்வித்துறை செயலாளர், சி.எஸ்.ஐ. அமைப்பின் செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை 7 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை.







