டெல்டாவில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள்: அமைச்சர் சக்கரபாணி!

டெல்டா பகுதிகளில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டி கிராமத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா 2ம் கட்ட நிவாரண நிதி மற்றும் 14 வகை…

டெல்டா பகுதிகளில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்

திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டி கிராமத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா 2ம் கட்ட நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல் கொள்முதலுக்காக பல நாட்கள் விவசாயிகள் காத்திருந்த நிலையில், தற்போது 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்து, அதற்கான பணத்தை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.