சித்தார்த் – அதிதிக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா !

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் நடிகை நயன்தாரா வாழ்த்து கூறியுள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தின் மூலம் நடிகர் சித்தார்த் தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.  ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின்…

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் நடிகை நயன்தாரா வாழ்த்து கூறியுள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தின் மூலம் நடிகர் சித்தார்த் தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.  ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார்.   தற்போது,  இவரது நடிப்பில் வெளியான ‘சித்தா’ மிகுந்த வரவேற்பை பெற்றது.

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்டது.  இந்த நிலையில் மார்ச் 27 ஆம் தேதி திடீரென இருவருக்கும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயிலில் திருமண நடந்ததாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  அதிதி ராவ் ஹைத்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் சித்தார்த்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பதிவு செய்துள்ளார்.  மேலும் நிச்சயதார்த்தம் போது மாற்றிக்கொண்ட மோதிரத்தின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “வாழ்கை முழுவதும் இன்பம் பொங்க வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.