முக்கியச் செய்திகள் சினிமா

“நயனும், நானும் அப்பா, அம்மா ஆயிட்டோம்”- விக்கி ட்வீட்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய், தந்தையாகி உள்ளதாக விக்னேஷ் சிவன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக தற்போது வலம் வருகிறார். அவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அவர் தெலுங்கு, மலையாளம் என தன் நடிப்பால் நம்பர் ஒன் நடிகையாகி லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரைப் பெற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நானும் ரவுடி தான் திரைப்படம் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நெருக்கமான நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து, இவர்கள் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய் தந்தையாகி உள்ளதாக விக்னேஷ் சிவன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜீன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது இரட்டை ஆண் குழந்தை புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று கொண்டது குறித்து நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக குடிநீர் விநியோகம்

EZHILARASAN D

நியாயவிலைக்கடைகளில் பனைவெல்லம் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை – தமிழ்நாடு அரசு

Arivazhagan Chinnasamy

பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள் – திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!

Halley Karthik