சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த நடிகர் சரத்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் சரத்குமார் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் கனவுப் படமான ’பொன்னியின் செல்வன்’ இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் சரத்குமார் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் கனவுப் படமான ’பொன்னியின் செல்வன்’ இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளம் கால்பதித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சுவைமிக்க விருந்தாக அமைந்துள்ள பொன்னியின் செல்வன் வெளியான நாள் முதல் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் தமிழ் திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பின் வெளிவரும் வரலாற்றுப் படமாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் திரைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

https://twitter.com/realsarathkumar/status/1579084643655380992?t=PhByIMx8-y1Ugrb3kABnrQ&s=09

இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.75 கோடி வசூல் செய்திருந்தது. 3 நாட்களுக்குள் ரூ.230 கோடி வசூல் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இத்திரைப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டையராக நடித்துள்ள சரத்குமாரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் நடிப்பு திறமையை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் சரத்குமார் மற்றும் அவரின் மகள் வரலட்சுமி ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்தனர். இதுகுறித்து நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டையார் கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை தொலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தாக பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.