தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காகத் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து இன்று காலை மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார்.
குடலிறக்க சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வருக்கு சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதியானது.
குடலிறக்க அறுவை சிகிச்சை நேற்று முடிந்த நிலையில் இன்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து நடந்து சென்று காரில் ஏறி வீட்டிற்கு சென்றார். அவர் 3 நாட்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்திவுள்ளனர்.







