திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து 10-ஆம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட பகுதியில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையானதும், மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு நகரம் ஆகும். இதுதவிர 156 ஏக்கரில் ஆசியாவின் மிக பெரிய கோபுரத்தை கொண்ட சிறப்பும் சின்ஹட்ட அலையத்திற்கு உண்டு.
அப்பேற்பட்ட அதிசயங்களையும், சிறப்புகளையும் கொண்ட ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டு தோறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.அந்த வகையில் இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி பெருந்திருவிழா கடந்த 22ம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் துவங்கியது. அதன் பின்னர் பகல் பத்து உற்சவம் நடைபெற்று கடந்த 2ஆம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இராப்பத்து உற்சவத்தில் நம்பெருமாள் பல்வேறு சிறப்பு அலங்காரத்துடன் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள திருமாமனி மண்டபத்தில் எழுந்தருளி சேவை ஆற்றினார். இதனையடுத்து இன்று இராப்பத்து பத்தாம் திருநாளில் நம்பெருமாள் பரமபத வாசல் அருகே உள்ள சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டுளினார்.
முன்னதாக மூலஸ் தானத்திலிருந்து தங்க பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் உள்ள சந்திரபுஷ்கரனி குளத்தில் தீர்த்தவாரி கண்டுருளினார். தீர்த்தவாரி விழாவை காண்பதற்காக குளத்தை சுற்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்தனர். கடந்த 22ம் தேதி துவங்கிய வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவில் நாளை காலை நடைபெறும் நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவு பெறுகிறது.










