நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த ரா.புதுப்பட்டியில் அமைந்துள்ள துலுக்க சூடாமணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வருகிற 3ம் தேதி நடைபெறுவதையொட்டி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட தீர்த்தக்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள ரா.புதுப்பட்டியில் புகழ்பெற்ற அருள்மிகு துலுக்க சூடாமணி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த சில நாட்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன.இப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி 3-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனைமுன்னிட்டு வடுகம், புதுப்பட்டி,கடமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் சுமார் இரண்டாயிரம் பேர் மாரியம்மன் கோயிலில் இருந்தும், மலையாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளவழி கருப்பனார் கோயிலில் இருந்தும் தீர்த்தக்குடத்தை ஊர்வலமாக சுமந்து கொண்டு கோயிலுக்கு வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து கோயிலில் துலுக்க சூடாமணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.