நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்பிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததை தொடர்ந்து அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க மண்டல ஐஜி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வடகரையாத்தூரில் வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலை அமைந்துள்ளது. இங்கு பல வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆலையின் வளாகத்திற்குள்ளேயே குடியிருப்பு அமைத்து தங்கியிருக்கின்றனர்.இந்நிலையில் நேற்றிரவு வட மாநில தொழிலாளர்கள் குடியிருப்பு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் கூச்சலிட்ட தொடங்கினர். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் காயமடைந்த மூவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மணடல ஐஜி சுதாகர்,மாவட்ட எஸ்பிக்கள் நாமக்கல் கலைச்செல்வன், ஈரோடு சசிமோகன் உட்பட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே இப்பகுதியில் சில நாட்களுக்கு முன்னர்தான் தனியார் பள்ளியில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது மற்றும் ஏரியில் மீன்கள் செத்து மிதந்தது குறிப்பிடத்தக்கதாகும்.கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி இப்பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யபட்டார்.இது தொடர்பாக 17வயது சிறுவன் கைது செய்ய்பட்டார்.
தொடர்ந்து இப்பகுதியில் நிகழ்ந்து வரும் சமூக விரோத செயல்களால் இப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகின்றன.பாதுகாப்பு காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-வேந்தன்