CSK ரசிகரின் நடன அசைவுகளை பின்பற்றும் சியர்லீடர்கள் -இணையத்தில் வைரலாகும் wholesome video!…

சிஎஸ்கே ரசிகரின் அசைவுகளைப் பின்பற்றி  சியர்லீடர்கள் ஆடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.  தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசன் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அமைந்துள்ளது. புதிய கிரிக்கெட் வீரர்களின்…

சிஎஸ்கே ரசிகரின் அசைவுகளைப் பின்பற்றி  சியர்லீடர்கள் ஆடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. 

தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசன் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அமைந்துள்ளது. புதிய கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவது முதல் பார்வையாளர்கள் அரங்கில் எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான வீடியோக்கள் வரை, ஐபிஎல் போட்டிகள் பற்றிய பதிவுகள் ஏராளமாக இணையத்தை சுற்றி வருகின்றன.

தற்போது, ​​சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடிய பவர் பேக் மேட்ச் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட கிளிப்பில், சிஎஸ்கே ரசிகர்களில் ஒருவர் ஸ்டாண்டில் மகிழ்ச்சியுடன் நடனமாடுவதைக் காண முடிந்தது. சிஎஸ்கே சியர்லீடர்கள் ரசிகரின் அசைவுகளைப் பின்பற்றுவதைக் காண முடிந்தது. இது நிச்சயமாக ஐபிஎல்லின் மிகவும் பொழுதுபோக்கு வீடியோக்களில் ஒன்றாகும்.

இந்த பதிவு 1 கோடியே 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் ஏராளமான கமெண்டுகளை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.