நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கதிர்மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவிற்கான கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டி கதிர்மலையில் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்லும்
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கொடிபட்டம் உற்சவர் முருகப்பெருமானின் திருக்கோயிலை சுற்றி வந்தது. கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின்னர் கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—வேந்தன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: