பிரபல ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து; பல லட்சம் மதிப்பிலான துணி வகைகள் எரிந்து சேதம்!

கோழிக்கோடு அருகே பிரபல ஜவுளி கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கார்கள் உட்பட பல லட்சம் மதிப்பிலான துணி வகைகள் எரிந்து சேதம் அடைந்தன. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பாளையம் சாலையில்…

கோழிக்கோடு அருகே பிரபல ஜவுளி கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கார்கள் உட்பட பல லட்சம் மதிப்பிலான துணி வகைகள் எரிந்து சேதம் அடைந்தன.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பாளையம் சாலையில் உள்ள ஜெயலெக்ஷ்மி சில்க்ஸ் என்ற பிரபல ஜவுளிகடையின் நான்காவது மாடியில் இருந்து புகை வெளியேறியதை பார்த்த மக்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் தீயணைப்புத் துறை வீரர்கள் வரும் முன் தீ மளமளவென எரிந்து முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அக்கடையின் விளம்பர பிளக்ஸ் போர்டில் பரவியது.

இந்த போர்டு உருகி கீழே விழுந்ததில் கீழ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு கார்கள் சேதமாகின, தொடர்ந்து பல லட்சம் மதிப்பிலான துணி வகைகள் எரிந்து நாசமான நிலையில், 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பின்  தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் முதற்கட்ட விசாரணையில் விபத்திற்கு காரணம் மின் கசிவாக இருக்கலாம் என  தெரிவித்துள்ளனர்.

—-கா. ரூபி

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.