நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானார்.
நுரையீரல் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாகவே சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1 மணியளவில் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியைச் சேர்ந்த செல்வராஜூக்கு கடந்த ஜனவரி மாதம் நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக திருவாரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட செல்வராஜ் அதற்கான தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். இப்படியான நிலையில் தான் நுரையீரல் தொற்று கண்டறியப்பட்டிருந்தது. 67 வயதான செல்வராஜ் 1989,1996,1998,2019 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யாக இருந்துள்ளார்.
கடந்த மாதம் மக்களவை தேர்தல்ட் தமிழ்நாட்டில் நடைபெற்ற நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







